காலங்கள் கடந்தபோதும்
காதல் மட்டும் உன்னிடத்தில்
கவிதை எழுதியபோதும்
கற்பனை மட்டும் உன்னிடத்தில்
உதடுகள் அசைந்த போதும்
உள்ளம் மட்டும் உன்னிடத்தில்
கண்கள் உறங்கிய போதும்
கனவுகள் மட்டும் உன்னிடத்தில்
நான் இறக்கும் போதும்
என்
இதயம் மட்டும் உன்னிடத்தில்....
No comments:
Post a Comment