Tuesday, August 6, 2013

சொர்க்கம்

இறந்து விட்ட என் இதயம்
சொர்கத்தை பழிக்கிறது ,
வாழும்போது ,
அவள் மடி சாய்ந்த தருணத்தில்
அது கண்ட சொர்கத்தை விட
இது ஒன்றும் அழகல்ல என !

நீயும் நானும்

நினைந்தும் நினையாமல் ...
மறந்தும் மறவாமல் ...
சிரித்தும் சிரியாமல் ..
அழுதும் அழாமல் ..
நித்தம் இறந்தும் இறவாமல்
இருக்க ...
உன்னாலும்  என்னாலும்
மட்டும் முடிகின்றது...
எனக்கு நீ இல்லை ..
உனக்கு நான் இல்லை
என்று தெரிந்தும்.

இறுதி ஆசை

­­­­­­என் உயிர் நண்பர்களே ...!
என் இறுதியாசையை நீங்கள்
தான் ..
நிறைவேற்றி வைக்கவேண்டும் ...?
நான் இறந்தால் என்
உடலைப்புதைத்து விடுங்கள் !
மறந்தும் எரித்து விடாதீர்கள்
நெருப்பின் சூட்டில்
துடிதுடித்து விடபோகிறது என்னவளின்
நினைவுகள்...!
இது என் இறுதி வேண்டுகோள்...!
புதைகுழிக்குள் இருந்தும்
என்னவளை ..
நான் நினைக்க வேண்டும்.....!!

Thursday, August 1, 2013

நீ மட்டும்

தொடும் தூரம் என நினைக்கும் வானம் நீ
உன்னை தொடவும் முடியவில்லை
தொடரவும் முடியவில்லை...
ஆனால் நீ மட்டும் எப்படி தொடர்ந்து கொண்டிருக்கிறாய்

என் நினைவுகளாய்....

காதல் பிறந்தது

காதல் பிறந்தது என்னில் இயற்கையாய்..
இறப்பதும் இயற்கைதான் என்று சொல்லி
இறந்தும் போனது,..

இடிந்து போனேன் இதயம்
இறந்து விடுமோ என்று..

வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
வலிகளை தாங்கி...

உடலில் அல்ல உள்ளத்தில்

உன் நினைவுகளில்...

காதல் பிரிவு

அவள் என்னை விட்டு விலகி செல்கையில்
அவள் நினைவுகளையும் எடுத்து சென்றிருந்தால்
அவளை பிரிந்து தவிக்கும் வேதனையின் வலி

பெருமளவு குறைந்திருக்கும்...

என் காதலி

என் காதலி என்னை ஏமாற்றவில்லை
என்னை பக்குவப்படுத்தி இருக்கிறாள்
இதுபோல் இனி யாரிடமும் ஏமாந்துவிடாதே என்று...


என் இதயத்தில்

என் இதயத்தில் உனக்கான இடம் அப்படியேதான் இருக்கும்...
அங்கு நீயும் வரப்போவதில்லை

நானும் அதை யாருக்கும் தரப்போவதும் இல்லை....

நினைவு பரிசு


எல்லோரும் பிரிந்து போகும்போது நினைவு பரிசு தருவார்கள்
என்னவள் மட்டும் அவளது நினைவுகளையே பரிசாக தந்து சென்றாள்.


தோல்வி

தோல்வி எனக்கு புதிதல்ல
அதனால் தான் அவளை
மறக்க வேண்டும் என்று
நினைக்குபோது கூட என்
மனதுடன் போராடி

தோற்று போகிறேன்....