Sunday, September 29, 2013

கண்ணீர்

ஆயிரம் அடி தோண்டியும் கிடைக்காத தண்ணீர்
ஒரு அடி அவள் என்னை விட்டு விலகியதும் உருவானது

என் கண்ணில்..!

Saturday, September 28, 2013

அவள் மௌனத்தால்

அவள் என் கல்லறையில் மௌன அஞ்சலி செலுத்துகிறாள்
பாவம் அவளுக்கு தெரியவில்லை

நான் இறந்தே அவள் மௌனத்தால் தான் என்று...!

என் நினைவுகள்

அவள் என்னை பற்றி நினைப்பதற்கு எதுவுமில்லை

என்பதையும் சேர்த்து மறப்பதற்கு என்னிடம் ஏராளமாக இருக்கின்றது...

என் மரணம்

அன்று அவள் மட்டும் என்னை பார்த்து சிரிக்காமல் இருந்திருந்தால்
இன்று யாரும் அழுது கொண்டிருக்க மாட்டார்கள்

என் கல்லறையில்...

நீ மட்டும்

தொடும் தூரம் என நினைக்கும் வானம் நீ
உன்னை தொடவும் முடியவில்லை
தொடரவும் முடியவில்லை...
ஆனால் நீ மட்டும் எப்படி தொடர்ந்து கொண்டிருக்கிறாய்

என் நினைவுகளாய்....

காதல் தோல்வி

காற்றை தேடி சென்றேன்
பிடிக்க முடியவில்லை

அன்பை தேடி பழகுகிறேன்
அமையவில்லை..

ஆசையை அறவே மறக்கிறேன்
முடியவில்லை..

அழகை தேடி தொலைத்தேன்
ஏற்கவில்லை..

உன்னை நினைத்தேன்

விழிகள் மூடவில்லை...!

உன் நினைவுகள்

நொடிக்கு நொடி நினைக்கும் உன்னை
மறப்பது எப்படி என்று தெரியாமல்தான்
உறங்குகிறேன் இந்த கல்லறையில்..


காற்றில் அவள்

காற்றில் கூட அவள் இருக்கிறாள்
என்பதை உணர்ந்தேன்
தூசியாய் வந்து என் கண்களை

கலங்கவைத்த போது...

பிரிவு கவிதை

பிரிவை நினைத்து கவிதை எழுதினேன்
காகிதம் நனைந்து விட்டது 
பிறகுதான் புரிந்தது வந்தது

கவிதை அல்ல கண்ணீர் என்று...

இதயம் உன்னிடத்தில்


காலங்கள் கடந்தபோதும்
காதல் மட்டும் உன்னிடத்தில்

கவிதை எழுதியபோதும்
கற்பனை மட்டும் உன்னிடத்தில்

உதடுகள் அசைந்த போதும்
உள்ளம் மட்டும் உன்னிடத்தில்

கண்கள் உறங்கிய போதும்
கனவுகள் மட்டும் உன்னிடத்தில்

நான் இறக்கும் போதும்
என் இதயம் மட்டும் உன்னிடத்தில்....

காதல் வரலாறு

என் நினைவுகளை கலைத்து,
இமைகளை வருத்தி
இதயத்தை கிழித்து,
நித்தம் ஒரு சித்ரவதை

எனக்காக ஒரு சின்ன புன்னகை
சிரித்துக்கொண்டே செத்துபோய் விடுகிறேன்

ஏனெனில் காதலும் என்றோ ஒரு நாள்
என்னையும் கொல்லும் என்று காதல்
வரலாறு சொல்லிதந்ததால்..

நீ இன்றி

என்னை சுற்றி எல்லாம் அழகாய் இருந்தாலும்
அழுகிறேன் நான் இங்கு..


அனைத்தையும் நீ இன்றி நான் மட்டும் ரசிப்பதால்...

என் இதய வலி

நேசிப்பதும் வலி என்று
உன்னை பார்க்கும் வரை
அறியவில்லை..
நெஞ்சில் உள்ள வலி உனக்கு- என்
கண்களை பார்த்தும் புரியவில்லை

இன்னொரு ஜென்மம் நீ ஆணாக பிறந்து
உன்போல் ஒரு பெண்ணிடம்
இதயத்தை இழந்து

உன் இதயம் வலிக்கையில் தான்
என் இதய வலி உனக்கு புரியுமென்றால்

என் இதயத்தின் வலி உனக்கு
புரியாமலே போகட்டும்
பூ போன்ற உன் இதயம் என்றும்

வலி காணாமலே வாழட்டும்...

என் காதல்

ஒருமுறையாவது உன்னிடம்
சொல்லிவிட வேண்டும்
என்றுதான் நினைக்கிறேன்
சொல்லாமல் விட்ட
என் காதலை... 

கனவுகள் கலைந்தன

என் கண்ணீரின் சுவையினில்
இன்று கலந்தது எனக்குள்
உன்னைப்பற்றிய கனவுகள்
சட்டென்று தோன்றின
நான் மறந்த என் உணர்வுகள்
இனி உனக்காக நானில்லை
என்றேனும் உன்னை சந்தித்தால்
அன்று மிச்சமிருக்கும் கனவுகளும்

நிச்சயமாக கலைந்து போகும்...

உன் மௌனம்

உன் மௌனங்கள்
கலையட்டும் பெண்ணே
ஒரு வார்த்தை பேசிவிடு
சில மௌனங்கள்
உடையும்போது
வார்த்தைகள் பிறக்கும்
உன் மௌனம் உடைந்தால்தான்
என் வாழ்கையே பிறக்கும்
புரிந்து கொள் உயிரே
புரிந்து கொள்ளாமல்
பிரிந்து செல்ல நினைப்பது

நியாயமா?? 

இதய நோயாளி

அன்பே உன்னால் என் இதயத்தில்
துவாரம் ஏற்பட்டு உதிரம் கசிகிறது
உரக்க உன் பெயரை உச்சரித்த பின்
இறக்க ஆசைபடுகிறது

இந்த இதய நோயாளியின் மனம்...

நிஜம் நிழல்

உன் நிழலாக நானிருந்தேன் அன்று
உன் நினைவில் கூட நானில்லை இன்று
நிஜமன்றி நிழல் மட்டும் எதற்கடி

எனக்கு....  

நீ எறிந்த கடிதம்


நான் உனக்கு கொடுக்கும்
காதல் கடிதங்கள் எல்லாம் - நீ
எறிகிறாய் இல்லை எரிக்கிறாய்.
அவற்றின் மிச்சங்களை கூட
பத்திரமாக வைத்துள்ளேன்
உன் விரல்கள் தீண்டியதால்....

கனவில் என் வாழ்க்கை

பகல் முழுவதும் இரவாக
வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டினேன்..!
இரவுநேர கனவில்
மட்டுமே உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
சுகத்தை,
நாள் முழுவதும்
அனுபவிக்கவேண்டும்
என்ற பேராசையினால்.....!

ஒரு தலை காதல்

காதலுக்காக நீயும் இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை
ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று
தினம் தினம்
பார்வையால் பரிசளித்தது
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்
நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை

ஆசைகள்

ஆயிரம் ஆசைகள்
அத்தனையும் நிறைவேற்ற
ஆயிரம் ஆயுள் வேண்டும்
உன்னோடு மட்டும்!!

காதலியின் திருமணம் 9

கனவே கலையாதே
தயவு செய்து கலையாதே ...
என்னவளின் கடைசி சந்திப்பு...
நிகழ்ந்து கொண்டிருக்கிறது ..
விடிந்தால்.....!!!!
காதலிக்கு திருமணம்...!

காதலியின் திருமணம் 8

என்னோடு
ஒற்றையடிப்பாதையில்
கைகோர்த்து
நடந்தவள்!
விலகி வேறுபாதையில்
சென்றுவிட்டாள்!
விலகமுடியாத
அதே பாதையில்
அவள் நினைவுகளோடு
நான்

காதலியின் திருமணம் 7

இன்று ஒரு மணநாள்
எங்கும் அலங்கார தோரணை
எங்கும் மலர்கள் செறிந்த மணபந்தல்

மணாளனை  தேடியது கண்கள் 
பொறாமை கொண்ட மனம் தவித்தது

தேவதைகள் சூழ என்னவள் 
குறையாத அழகோடு வந்தால் 
ஒரு முறையாவது பாரடி என்றது மனம்

இதை காணத்தான் காதலித்தேனா?
பிரிவு விஷத்திலும் கொடியது என 

அன்று உணர மறந்தது ஏன்?

காதலியின் திருமணம் 6

நான் ஏன் பிறந்தேன் ;
எதற்காக உன்னை சந்தித்தேன் ;
இப்பொழுது ஏன் துடிக்கிறேன் ..
பல பேர் நெஞ்சத்தில் எழும்கேள்வி - இன்று
என்னுள்ளும் எதிரொலியாய்
நிற்காமல் ஒலிக்கிறது .
மழையாய் கண்ணீர் துளிகள் கொட்டுகிறது.
உன்னை வாழ்த்துவாதா இல்லை
நான் வீழ்வதா தெரியாத வேதனை;
இமைமூடியும் கண்ணீர்
காட்டிக்கொடுத்தது அனைவரிடமும்.
நான் அழுகிறேன் என்பதை.

காதலியின் திருமணம் 5

நண்பனாக செல்லவா
அறிமுகமே இல்லாதவனாக செல்லவா
எப்படி செல்வது...

காதலிக்கு திருமணம்.....

காதலியின் திருமணம் 4

கண்ணீர்- சோகம்- வலி
வேதனை - சாவு.
இப்படி எல்லா
சோக உணர்வுகளையும்
கவிதைகளில் என்னால்
சொல்லிவிட முடிகிறது.
ஆனால்
உன் கணவனோடு கைகோர்த்து
நீ என்னை கடந்து போகையில்
தேம்பி தேம்பி அழும்
இடிந்து போன என் இதயத்தின் குமறலை
விவரித்து சொல்ல முடியவில்லை.
உன்னை மறக்க முடியவில்லை

காதலியின் திருமணம் 3

அவளுடன்
பழகிய  
அந்த நாள் 
நியாபகங்கள்
இன்னும் 
என் 
நெஞ்ஜோரமாய்
நகர்ந்து
கொண்டே தான்
இருக்கின்றன
அவள் 
வேறொருவன்
கை பிடித்து 

நடக்கும் போதிலும்..

காதலியின் திருமணம் 2

உன் கல்யாண சத்தத்தில்
நம் காதல்
அமைதியாகத்தான் அழுகிறது....

உன் கல்யாண கூட்டத்தில்
நம் காதலுக்கு இடமில்லாமல்
போனது ஏனோ.?..

உன் கல்யாணத்தில்
வரவேற்பறையில்
வரவேற்க ஆளிலாமல்
நம் காதல் அனாதையாய் நிற்கிறது....

உன்னை சுற்றிலும் பெரும் கூட்டம்
என்னை சுற்றிலும் உன் நினைவுகள்தான்....

கல்யாண கோலத்தில் நீ அழகாய்தான் இருக்கிறாய்
அதனால்தான் இன்றும் உன்னை
மெய்மறந்து பார்த்துகொண்டிருகிறேன்
நீயோ எனைமறந்து மணமேடையில் நிற்கிறாய்.... 

காதலியின் திருமணம்

நீ ஈந்த நினைவுகளின்
நீர்ச்சுழியில்
சிக்கி இன்னும் மீளாமல்
சாகின்றேன்,
கடந்துசெல்லும் பொழுதுகளின்
பொறிகளுக்குள்
தொலைகின்றேன்
உன் வருகை தேடியே...
மணமுடித்த சேதிதனை
கேள்வியுற்று
பிணமாக ஆகிப்போவேன்
விரைவினிலே,
எனக்கில்லை
நீயென்று ஆனபின்பு
இருந்தென்ன செத்தென்ன


கண்ணாக கரம் பிடித்த
கணவனுன்னை
கலங்காது காத்திடவும்
வரம்வேண்டி,
கோரிக்கை கொண்டுசெல்வேன்
இறைவனிடம்
காணிக்கை என் உயிர்
சில நொடியில்...