உன்னோடு
சில காலம்
அதன் நினைவோடு பல காலம்.............
உன்னை சந்தித்த சில நாட்களிலேயே
என்னுயிரில் நீ விதைத்தாய் உன் நினைவுகளை ,
நீ விதைத்தது என்னுள் வளர்ந்தது காதலாய்
கனவென்னும் பூக்களை சுமந்தபடியே ,
இன்று வரை காத்திருகின்றன
நீ என்னுள் விதைத்த கனவுப்பூக்கள் ,
அதன் மணத்தை என்றாவது
உன் இதயம் உணரும் என நம்பி .....!
என்ன பயன் ,
என்னுள் விதைக்கப்பட்ட நீ
எனக்கே விதிக்கப்பட்டவள்
என்றெண்ணியபடியே பூக்கும்
அந்த கனவுகளுக்கு
எப்படி புரிய வைப்பேன்
நீ
என்னுடையவள் இல்லை என்று......