Saturday, September 28, 2013

என் இதய வலி

நேசிப்பதும் வலி என்று
உன்னை பார்க்கும் வரை
அறியவில்லை..
நெஞ்சில் உள்ள வலி உனக்கு- என்
கண்களை பார்த்தும் புரியவில்லை

இன்னொரு ஜென்மம் நீ ஆணாக பிறந்து
உன்போல் ஒரு பெண்ணிடம்
இதயத்தை இழந்து

உன் இதயம் வலிக்கையில் தான்
என் இதய வலி உனக்கு புரியுமென்றால்

என் இதயத்தின் வலி உனக்கு
புரியாமலே போகட்டும்
பூ போன்ற உன் இதயம் என்றும்

வலி காணாமலே வாழட்டும்...

No comments:

Post a Comment