Saturday, September 28, 2013

காதலியின் திருமணம் 2

உன் கல்யாண சத்தத்தில்
நம் காதல்
அமைதியாகத்தான் அழுகிறது....

உன் கல்யாண கூட்டத்தில்
நம் காதலுக்கு இடமில்லாமல்
போனது ஏனோ.?..

உன் கல்யாணத்தில்
வரவேற்பறையில்
வரவேற்க ஆளிலாமல்
நம் காதல் அனாதையாய் நிற்கிறது....

உன்னை சுற்றிலும் பெரும் கூட்டம்
என்னை சுற்றிலும் உன் நினைவுகள்தான்....

கல்யாண கோலத்தில் நீ அழகாய்தான் இருக்கிறாய்
அதனால்தான் இன்றும் உன்னை
மெய்மறந்து பார்த்துகொண்டிருகிறேன்
நீயோ எனைமறந்து மணமேடையில் நிற்கிறாய்.... 

No comments:

Post a Comment