Saturday, July 27, 2013

உன் நினைவில் நான்

உன் நினைவில் நான் ...
உன்னோடு
இருந்தபொழுதுகள்
கண்ணோடு கலந்து
கண்ணீராக வலியுடன்
வதைத்து கொல்கிறது

உனக்காக எழுதிய
காதல் கவிதைகளை
பார்க்கிறேன்
படிக்கமுடியவில்லை
படிப்பதற்குள் - என்
கண்ணீர்துளிகள்
நனைத்துவிட்டது

நீ
பரிசாக கொடுத்த
கண்ணீர்த்துளியை
என் இமைக்குள்
புதைத்துக் கொண்டு
விழியிழந்தவனாகிறேன்

உன் பெயரை
அடிக்கடி சொல்லி
பார்த்தேன் -உன்னை
அழைப்பதற்கு அல்ல
என்னுயிர்
என்னிடம்தான்
இருக்கிறதா என்று
பார்ப்பதற்கு ...

No comments:

Post a Comment